கோயம்பேடு மார்க்கெட் சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

கோயம்பேடு மார்க்கெட் சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

கோயம்பேடு மார்க்கெட்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் சில்லறை வியாபாரிகளுக்கு கோயம்பேட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் சில்லறை வியாபாரிகளுக்கு கோயம்பேட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு மாநிலம் முழுவதற்குமான பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.

    இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கோயம்பேடு சிறு வியாபாரிகள் தெரித்துள்ளனர். மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்க கடைகளை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில்,  எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறி சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

    கடந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பட்டபோது, 190 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டன. தற்போதும் இந்த நிலையே ஏற்பட்டிருப்பதால், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என போராட்டம் நடத்தும் வியாபாரிகள் கூறினர்.

    அத்துடன், கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    கடந்த ஊராடங்கின் போது கடைகள் 7 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டது இதனால வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்நிலையில் தமிழக அரசின் இந்த கொரோன கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக நாளை முதல் சிறுகடைகள் மூடப்படுவதாக வெளியான அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Must Read : தடுப்பூசி திருவிழா... : மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

     

    இந்நிலையில், நண்பகல் 12.30 மணியளவில் தலைமை செயலகத்தில் சி.எம்.டி.ஏ நிர்வாக செயலாளர் கார்த்திகேயன் உடன் கோயம்பேடு முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்த் ராஜ் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: