மதுபோதையில் தகராறு.. தாய், தந்தையைத் தாக்கிய அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி

மதுபோதையில் தகராறு.. தாய், தந்தையைத் தாக்கிய அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி

கொல்லப்பட்ட செல்லப்பாண்டி.

கோவில்பட்டி அருகே தாய், தந்தையை மது போதையில் தாக்கிய அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தாய், தந்தையை மது போதையில் தாக்கிய அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.

அழகப்பாபுரத்தைச் சேர்ந்த விஜய பாண்டியன், சிங்கம்மாள் தம்பதியினருக்கு செல்லப்பாண்டி, முத்துப்பாண்டி என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் தீபாவளியையொட்டி நாள் முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், வீட்டிற்குச் சென்றபோது செல்லப்பாண்டி தனது தாய், தந்தையை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இதனை தம்பி முத்துப்பாண்டி தடுக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி கம்பு, கற்களைக் கொண்டு முத்துப்பாண்டியைத் தாக்கியுள்ளார். அடி தாங்க முடியமால் முத்துப்பாண்டி அருகில் இருந்த தொழுவிற்கு ஓடியுள்ளார். அவரை துரத்திச் சென்ற செல்லபாண்டி, தான் வைத்திருந்த கத்தியால் முத்துப்பாண்டியைக் குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.அப்போது செல்லப்பாண்டி கையில் இருந்த கத்தியை பிடுங்கி முத்துப்பாண்டி அவரை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் செல்லப்பாண்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் முத்துப்பாண்டியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Rizwan
First published: