தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற இராணுவ வீரர் லடாக்கில் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கருப்பசாமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ 5லட்சம் நிதியுதவி வழங்கினார். குழந்தைகளின் கல்வி செலவினையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நேற்று காலை நடந்த விபத்தில் வீரமரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் கருப்பசாமி வீட்டிற்கு சென்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜூ கருப்பசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கடம்பூர்.ராஜூ மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். ராணுவ வீரர் கருப்பசாமி உயிரிழந்த சோகத்தில் குடும்பத்தினர் கதறி அழுததை பார்த்த அமைச்சரும் கண்கலங்கினார். இதையெடுத்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ 5 லட்சம் கருப்பசாமி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார். குழந்தைகளின் கல்வி செலவினையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்
இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர்.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் 14 ஆண்டுகளாக இராணவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவையாற்றிய கருப்பசாமி விபத்தில் பலி என்பது அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல வேதனைக்குரியது. அவருடைய இழப்பு அவருடைய வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் வேதனை அளிக்ககூடியது. கருப்பசாமி குடும்பத்திற்கு தமிழக முதல்வர் சார்பில் ஆறுதல் மற்றும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளோம்.
இராணுவத்திடம் இருந்து முழுதகவலையும் பெற்றவுடன், கருப்பசாமி குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் உதவிகளை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தற்பொழுது தனது சொந்த நிதியில் இருந்து நிதி வழங்கியுள்ளதாகவும், கருப்பசாமியின் மனைவியில் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க முதல்வரிடம் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும என்றும், அரசு வழங்கும் நிதியுதவி மட்டுமின்றி, கருப்பசாமியின் குழந்தைகளின் கல்வி செலவிற்கும் உதவி செய்யப்படும் என்றார்.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Minister kadambur raju