கொரோனா விழிப்புணர்வு பேனர்... மொய்க்கவரில் மாஸ்க், கபசுரக் குடிநீர்...! கோவில்பட்டியில் நடந்த சூப்பர் திருமணம்

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்றி, பிற திருமணங்களுக்கு எடுத்துக்காட்டாக கோவில்பட்டியில் ஒரு திருமணம் நடந்து முடிந்துள்ளது

கொரோனா விழிப்புணர்வு பேனர்... மொய்க்கவரில் மாஸ்க், கபசுரக் குடிநீர்...! கோவில்பட்டியில் நடந்த சூப்பர் திருமணம்
திருமண தம்பதி
  • News18
  • Last Updated: August 28, 2020, 6:01 PM IST
  • Share this:
திருமண விழா என்றாலே ஆளுயர பேனர்கள் வைக்கப்பட்டு, வரவேற்க பன்னீர் தெளிப்பதும், காதை பிளக்கும் ஒலியுடன் இன்னிசை மழை என அமர்க்களப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா என்ற ஒற்றைச்சொல் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது மட்டுமின்றி திருமண நிகழ்ச்சிகளையும் ஒருபதம் பார்த்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் தொடக்க காலத்தில் திருமண மண்டபங்களில் திருமணம் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது கடும் கட்டுப்பாடுகளுடன் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  திருமண நிகழ்ச்சியையே விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாற்றி இன்று ஒரு திருமணம் நடந்துள்ளது.
பொறியாளர்களான  கௌதம் குமார், மனோகரி இருவரின் திருமணம் தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது, திருமண அழைப்பிதழ் முதல் அனைத்திலும் அரசு விதிமுறைகளை திருமண வீட்டார் கடைபிடித்து உள்ளனர். வழக்கமாக திருமண அழைப்பிதழ்களில் குடும்பத்தினர் சகிதம் வந்து வாழ்த்த வேண்டும் என்று தெரிவிப்பது வழக்கமான ஒன்று அந்த இடத்தில் அரசு நெறிமுறைகளின் விதிகளின் படி திருமணம் நடைபெறுவதாக குறிப்பிட்டு கூட்டம் கூடுவதை தவிர்த்துள்ளனர்.

விதவிதமான பேனர்கள் வைக்கப்படவேண்டிய நிலையில் உள்ளே நுழையும் இடத்திலேயே சமூக இடைவெளி அவசியத்தை வலியுறுத்தியும், முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேனர்கள் வைத்து அசத்தியுள்ளனர். பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்க வேண்டிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்படுவது மட்டுமின்றி , காய்ச்சல் கண்டறியும் தெர்மா ஸ்கேனர் பயன்படுத்தியும் , சமூக இடைவெளி பேனர்களை மண்டப உள் அரங்கிலும் பயன்படுத்தி அதுபோலவே அமரச்செய்து அசத்தியுள்ளனர்.

திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு  தாம்பூல கவர்கள் வழங்குவதுடன், அதில் கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் மற்றும் முககவசமும் வழங்கி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக திருமணத்தினை மாற்றி மணமக்கள் வாழ்த்து பெற்றனர். அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா முற்றிலும் தடுக்கப்படும் என்பது மட்டுமல்லாது, இதுபோல் அனைவருமே விழிப்புணர்வுடன் செயல்பட்டாலே கொரோனாவை எளிதில் வென்றிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்த திருமணத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading