கோவில்பட்டியில் உணவின்றி தவிக்கும் மயில்களுக்கு உணவு வழங்கும் கல்லூரி ஊழியர்கள்!

கோவில்பட்டியில் உணவின்றி தவிக்கும் மயில்களுக்கு உணவு வழங்கும் கல்லூரி ஊழியர்கள்!

தினமும் 15 கிலோ அரியை மயில்களுக்கு உணவாக அளித்து வருகிறார்கள்.

தினமும் 15 கிலோ அரியை மயில்களுக்கு உணவாக அளித்து வருகிறார்கள்.

  • Share this:
கோடைக் காலத்தால் உணவின்றி பரிதவிக்கும் மயில்களுக்கு கோவில்பட்டி கல்லூரி ஊழியர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் குருமலை காப்புகாடுகள் உள்ளதால் இப்பகுதியில் அதிகளவில் மான் மற்றும் மயில்கள் உள்ளன. கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஜீ.வி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் 200க்கும் மேற்பட்ட மயில்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.

இந்த அரசு உதவி பெறும் கல்லூரி வளாகத்தில் ஏராளமான மரங்கள் மற்றும் தோட்டங்கள் உள்ளதால் மயில்கள் அதிகமாகவே வருவது வழக்கம். கல்லூரி நாட்களில் மாணவ-மாணவிகள் கொடுக்கும் உணவு வகைகளை இங்கு மயில்கள் உட்கொள்ளும். அதிகளவில் மயில்கள் வருவதால் கல்லூரியில் விரிவுரையாளர்கள், ஊழியர்கள் அரிசி, பிஸ்கட், முருக்கு உள்ளிட்டவற்றை மயில்களுக்கு வழங்குவார்கள்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மயில்கள் உணவிற்றி தவிக்குமோ என்று யோசித்த அக்கல்லூரி விரிவுரையாளர்களும் ஊழியர்களும், அவற்றுக்கு அரசி வாங்கிக் கொடுத்து கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாவலர்கள் மூலமாக தினந்தோறும் உணவு வழங்கி வருகின்றனர். தற்பொழுது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் விவசாய நிலங்களில் இரை கிடைக்காமல் மயில்கள் தவித்து வந்த நிலையில் கல்லூரி ஊழியர்களின் முயற்சியினால் தினமும் மயில்களுக்கு உணவு கிடைத்து வருகிறது.அக்கல்லூரியில் பணிபுரியும் முத்துக்கண்ணன் கூறும்போது, தற்சமயம் தினமும் 15 கிலோ அரியை மயில்களுக்கு உணவாக அளித்து வருவதாகவும், இதனால் மயில்கள் மட்டுமின்றி அங்குள்ள மரங்களில் இளைப்பாற வரும் பறவைகளுக்கும் உணவு கிடைப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு, கோடைக் காலத்திலும் மயில்களுக்கு தேவையான உணவினை ஊழியர்கள் அளித்து வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: