பணம் இல்லாததால் பருத்தியையே கூலியாக கொடுக்கும் கோவில்பட்டி பகுதி விவசாயிகள்

”நல்ல விலை கிடைத்து விடாதா? என்று நம்பிக்கை கொண்டவர்கள் எடுத்த பருத்தியை வீட்டில் வைத்துள்ளனர்”

பணம் இல்லாததால் பருத்தியையே கூலியாக கொடுக்கும் கோவில்பட்டி பகுதி விவசாயிகள்
பருத்தி விவசாயி
  • News18
  • Last Updated: May 23, 2020, 10:23 PM IST
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பருத்திகள் தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் நூற்பாலைகளுக்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

கடந்த காலங்களில் நமது பாரம்பரிய மிக்க விதைகளை பயன்படுத்தி வந்த விவசாயிகள்  சமீபகாலமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி பருத்தி விதைகள், வெளிநாட்டு நிறுவன பருத்தி விதைகளை பயிரிட்டு வருகின்றனர்.

இதனால் ஒரு ஏக்கருக்கு 15 குவிண்டல் வரை பருத்தி கிடைப்பதால் அந்த விதைகளை பயன்படுத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் பருவமழை நல்ல பெய்த காரணத்தினால் விவசாயிகள் ஆர்வமுடன் பருத்தியை பயிரிட்டனர். ஆனால் மழை பெய்ததால் பருத்தி செடிகள் வழக்கத்தினை விட 3 முதல் 4 மடங்கு அதிக உயரத்திற்கு வளர்ந்தன. மேலும் அதிகளவு புழு தாக்குதலும் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக மருந்து தெளிப்பதை விட கூடுதலாக 3 அல்லது 5 முறை வரை பூச்சி கொல்லி மருந்து தெளித்தனர்.


இதன் காரணமாக விவசாயிகள் ரூ 7ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கூடுதல் செலவு செய்தனர். ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்தாலும் பருத்தி நல்ல விலைக்கு போகும், அதன் மூலமாக சமாளித்து விடலாம் என்று நம்பி இருந்தவர்களுக்கு கொரோனா மற்றொரு ஏமாற்றத்தினைக் கொடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் பருத்தி எடுக்க முடியமால் தவித்த விவசாயிகள், விவசாய பணிக்கு தளர்வு அறிவித்த பின்னர் பருத்தி எடுக்க ஆள்கள் கிடைக்கமால் தவித்தனர்.

இவ்வளவு சிரமங்களையும் கடந்து பருத்தி எடுத்து போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் பல விவசாயிகள் பருத்தியை பறிக்காமல் செடியில் விட்டு விட்டுனர். சிலர் பருத்தியை எடுக்கமால் அழித்து விட்டனர். சில விவசாயிகள் பருத்தி எடுத்தவர்களுக்கு கூலி கொடுக்க பணம் இல்லமால், பருத்தியை கூலியாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையிலும் நல்ல விலை கிடைத்து விடாதா? என்று நம்பிக்கை கொண்டவர்கள் எடுத்த பருத்தியை வீட்டில் வைத்துள்ளனர்.

இதனை எத்தனை நாள் பாதுகாக்க முடியும் என்ற வேதனையுடன் புலம்பி வருகின்றனர். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் 5500 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை விற்பனையான பருத்தி, இந்தாண்டு 1700 ரூபாய்க்கு கேட்க கூட ஆள்கள் இல்லை என்றும், ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உதவி செய்தால் மட்டுமே வாழ முடியும் என்கின்றனர் விவசாயிகள்.எனவே, தமிழக அரசு நமது பாரம்பரிய மிக்க விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லுக்கு கொள்முதல் நிலையங்கள் அமைத்தது போன்று பருத்திக்கு கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் நேரிடையாக பருத்தி வாங்க வேண்டும், தற்போது, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது விவசாய சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading