• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முக்கிய வேட்பாளர்கள் போட்டியால் நட்சத்திர அந்தஸ்து பெறும் கோவில்பட்டி தொகுதி

முக்கிய வேட்பாளர்கள் போட்டியால் நட்சத்திர அந்தஸ்து பெறும் கோவில்பட்டி தொகுதி

Youtube Video

அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போன்ற முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி கோவில்பட்டி.

  • Share this:
    கோவை தெற்கு, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்தபடியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ள தொகுதி கோவில்பட்டி. அந்த தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் கோவில்பட்டி தொகுதி சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

    அமைச்சர் கடம்பூர் ராஜூவை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நீடிக்கிறார். அவருக்கு முன் இருந்த எம்.எல்.ஏ-க்களை விட கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதிக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, அதிமுக கட்சி சார்ந்த விஷயங்கள் அமைச்சருக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.

    அதுமட்டுமின்றி அமைச்சருக்கு அவருடைய சமுதாய மக்களின் வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வாக்குகள் பிரிவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை மறுத்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்களின் கோரிக்கையை ஏற்றே கோவில்பட்டி தொகுதியில் மீண்டும் களமிறங்கி இருப்பதாக கூறுகிறார்.

    அமமுகவின் முதல்வர் வேட்பாளராக களம்காணும் டிடிவி தினகரன், தன்னுடைய சமுதாய மக்களின் ஆதரவையும், அதிமுக அதிருப்தியாளர்களின் வாக்குகளையும் பெற்று வென்று விடலாம் என்று கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. கயத்தார் ஒன்றியத்தில் அமமுகவின் வளர்ச்சி, தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்தத்திற்கு எதிரான வாக்குகள் தனக்கு கிடைக்கும் என டிடிவி கருதுகிறார். இருப்பினும் டிடிவி தினகரன் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அவரை எவ்வாறு அணுகுவது என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

    வலுவான வேட்பாளர்களுக்கு இடையே எளிமையான முறையில் திமுக கூட்டணி கட்சிகளின் துணையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் களம் காண்கிறார். சிபிஎம் வேட்பாளர் சீனிவாசனுக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. கடந்த முறை மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக 17.46 % வாக்குகளைப் பெற்றது. இந்த முறை திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது. சிபிஎம் வேட்பாளர் சீனிவாசனுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க... இந்தியாவில் 2-ம் கட்ட கொரோனா பரவல்... இந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு...

    மாற்றங்களை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் 1.27 %  வாக்குகளை பெற்றது.

    களத்தில் இருக்கும் கட்சிகள் அனைத்திற்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதால் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தல் இந்த முறை சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: