திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து வால்பாறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோவை தங்கம் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அத்துடன், திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்களும் வேட்பாளர்களை ஆதரித்து ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமாகாவில் இருந்து விலகிய கோவை தங்கம் திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, வால்பாறை தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
காந்திசிலை அருகே
பிரச்சாரத்தின் போது பேசுகையில், “மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று கூறி பிரச்சாரம் செய்தார்.
Must Read : சேலத்தில் 40 டிகிரியை நெருங்கிய வெப்பநிலை - மற்ற மாவட்டங்களில் எவ்வளவு?
இந்நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சர்க்கரை அளவு குறைந்ததால், அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை தங்கத்தின் உடல் நலம் தேறி மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.