இது தானா சேர்ந்த கூட்டம்: கோவையில் கோவை சரளா பிரசாரம்

இந்த கூட்டம் எல்லாம் தானா வந்து சேர்ந்த கூட்டம் என்று கோவையில் பிரசாரத்தின் போது கோவை சரளா பேசினார்.

news18
Updated: April 14, 2019, 1:43 PM IST
இது தானா சேர்ந்த கூட்டம்: கோவையில் கோவை சரளா பிரசாரம்
கோவை சரளா
news18
Updated: April 14, 2019, 1:43 PM IST
கமல்ஹாசனின் கொள்கைகளாலும் , செயல்பாடுகளாலும் அவரை நோக்கி மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கோவை சரளா பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக கோவை கணபதி பகுதியில் கோவை சரளா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘கமல்ஹாசனின் கொள்கைகளாலும் செயல்பாடுகளாலும் அவரை நோக்கி மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் எல்லாம் தானா வந்து சேர்ந்த கூட்டம். கோவையில் தண்ணீரைக் கூட தனியாருக்கு தாரைவார்த்துவிட்டனர். குடிக்க, குளிக்கக் கூட தண்ணீரை லிட்டர் கணக்கில் காசு கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்திவிட்டனர். குப்பைகளைக் கூட முறையாக மாநகராட்சி அகற்றுவதில்லை. இவை சரியாக செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் தலைமைதான்' என்று பேசினார்.

மேலும் இதற்கு முன்பாக இருந்த கோவை எம்.பியை
இதுவரை யாராவது பார்த்து இருக்கின்றீர்களா? புதிய மாற்றத்தை உருவாக்குவோம். நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய டாரச்லைட் சின்னத்துக்கு வாக்களிக்கயுங்கள் என்று பிரசாரம் செய்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also watch

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...