• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உயிருக்குப் போராடும் பெண் சிறுத்தை: காப்பாற்றப் போராடும் வனத்துறை

உயிருக்குப் போராடும் பெண் சிறுத்தை: காப்பாற்றப் போராடும் வனத்துறை

உயிருக்குப் போராடும் பெண் சிறுத்தை.

உயிருக்குப் போராடும் பெண் சிறுத்தை.

கோவை மாவட்டம்  ஓடந்துறையில் கம்பிவேலியில் சிக்கி  படுகாயமடைந்த இரண்டு வயது பெண் சிறுத்தைக்கு வனத்துறையினர் தீவிர  சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற போராடி வருகின்றனர்.

  • Share this:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை அறிவொளி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  பட்டா விளை நிலத்தில் வேலிக் கம்பியில் சிக்கி 2 வயது பெண் சிறுத்தை காயமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அந்தப் பெண் சிறுத்தையை மீட்டனர்.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உள்ள குரங்குகள் மறுவாழ்வு மையக் கட்டிடத்தில் வைத்து படுகாயமடைந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கோவை வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் தேக்கம்பட்டி அரசு கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Also see:

பெண் சிறுத்தை மீட்கப்பட்டபோது மார்புப் பகுதியில் உள்ள தசைகள், முதுகெலும்பு, தண்டுவடம் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்துள்ளது. நீர்ச்சத்து குறைந்த நிலையில் காணப்பட்ட  சிறுத்தைக்கு, காயம்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

மேலும், இரு தினங்களாக இரத்த நாளங்கள் வழியாக குளுக்கோஸ் தொடர்பான திரவங்கள், ஆன்டிபயாடிக், வைட்டமின் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இரு தினங்களாக முன்னேற்றம் இல்லாத நிலையில் இன்று சிறுத்தையின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சிறுத்தைக்கு  மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அதற்கு இரத்த சோகை இருப்பதும் தெரிய வந்துள்ளது. பெண் சிறுத்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: