முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவை கார் வெடிப்பு.. சென்னைக்கு விரைந்த என்ஐஏ.. 5 இடங்களில் அதிரடி சோதனை!

கோவை கார் வெடிப்பு.. சென்னைக்கு விரைந்த என்ஐஏ.. 5 இடங்களில் அதிரடி சோதனை!

என் ஐ ஏ

என் ஐ ஏ

கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு, ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது. ஒற்றை ஓநாய் தாக்குதல் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்ககோரிய வழக்கில் தமிழக அரசின் நிலையாடு என்ன? - ஐகோர்ட்

இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர்,ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 5 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கார் வெடிப்பு தொடர்பாகவும், ஐஎஸ் அமைப்பு தொடர்பாகவும் NIA தீவிரமாக விசாரனை நடத்தி வரும் நிலையில் சில பெயர்கள் அடங்கிய லிஸ்டை  வைத்தே NIA சோதனையை நடத்தி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன

முன்னதாக கார் வெடிப்பில் சிக்கிய காரானது சென்னையில் நிஜாமுதீன் என்பவரிடம் வாங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.  அதன் அடிப்படையிலேயே சென்னையில் என் ஐ ஏ விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. உக்கடம் கோட்டை மேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Chennai, NIA