ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனை... பின்னணி என்ன?

ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனை... பின்னணி என்ன?

போலீஸ் சோதனை

போலீஸ் சோதனை

கோவையில் 20 இடங்கள், சென்னையில் 5 இடங்கள் என தமிழகம் முழுவதும் 45 க்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய புலனாய்வு முகமை(NIA) அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு நபர்களிடமும் NIA அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கோவையில் நடக்கவிருந்த நாசக்கார செயல் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், இந்த நாசக்கார செயலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? வெடி பொருட்கள் யார் மூலம் வாங்கபட்டது. அவர்களின் திட்டம் என்ன? என்பது குறித்து  NIA அதிகாரிகள் முழுவீச்சில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 4 மணி முதல் கோவையில் 20 இடங்கள், சென்னையில் 5 இடங்கள் என தமிழகம் முழுவதும் 45 க்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் புதுபேட்டை, திருவொற்றியூர், மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புதுபேட்டை திருவேங்கடம் தெருலுள்ள நிஜாமுதீன் என்பவர் வீட்டில் இன்று காலை 4.30 மணியிலிருந்து சோதனை நடைபெற்றது. செகண்ட்ஸ் காரை வாங்கி விற்பனை செய்யும் நிஜாமுதீன் தான் கோவை கார் விபத்துக்கு பயன்படுத்திய காரை வாங்கி கொடுத்தவர் என்பது NIA அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்ததையடுத்து நிஜாமுதீனிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் நிஜாமுதீனை NIA அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் சென்னை போலீசார் பெரம்பூர் ஜமாலியா, திருவொற்றியூர், மண்ணடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கோவை வெடிகுண்டு விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த 18 நபர்கள் பட்டியல் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ கைக்கு வந்த லிஸ்ட்.. கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை

குறிப்பாக ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின்  இல்லங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சென்னை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் மண்ணடி வடமரக்காயர் லெப்பை தெருவில் சிக்கந்தர் மற்றும் ராஜா முகமது ஆகியோர் வீடுகளில் பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் ஐ.பி.எஸ்., தலைமையில் துறைமுக காவல் உதவி ஆணையர் வீரக்குமார் மற்றும் பூக்கடை காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் பிரபு உள்ளிட்ட 38 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வியாசர்பாடி புது நகர் 7வது தெருவில் வசித்துவரும் ஜாஃபர் சித்திக் அலி என்பவர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள், ஓட்டேரி ஸ்டிரான்ஸ் ரோடு 5 வது தெரு சலாவுதீன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் புளியந்தோப்பு காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான 60க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இத தவிர எம்கேபி நகர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளிலும் சென்னை போலீசாரின் சோதனை நடைபெற்று வருகிறது.

NIA சோதனை நடைபெற்று வரும் அதே வேளையில் சென்னை காவல் துறையும் உள்துறை அமைச்சகம் தயார் செய்து கொடுத்த 18 கண்காணிக்கப்பட வேண்டிய நபர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Murugesh M
First published:

Tags: Chennai Police, NIA