முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காவல்துறை உங்கள் நண்பன்...மினி நூலகம் அமைத்து நிரூபித்த காவல் நிலையம்!

காவல்துறை உங்கள் நண்பன்...மினி நூலகம் அமைத்து நிரூபித்த காவல் நிலையம்!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காவல்துறை உங்கள் நண்பன் என்பதை வெறும் அறிவிப்பாக கொள்ளாமல் புத்தகங்களுடன்  அன்புடன் வரவேற்கிறது கோட்டக்குப்பம் காவல் நிலையம்.

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட புதுச்சேரி அருகே அமைந்துள்ளது, கோட்டக்குப்பம் காவல் நிலையம். இங்கு காவல் நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் புத்தகங்கள் படிப்பதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தின் வரவேற்பறையில் தனி மேஜையில் பல்வேறு விதமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், காவல் நிலையத்திற்கு வருபவர்களும், காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களும் ஓய்வு நேரத்தில் இந்த புத்தகங்களை படித்து பயன் அடைவதாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Police, School books, TN Police