நிரம்பி வழியும் கொசஸ்தலை ஆறு.. ஆபத்தை உணராமல் சுற்றுலாவுக்கு வந்ததுபோல செல்ஃபி எடுத்து விளையாடும் இளைஞர்கள்..

கொசஸ்தலை ஆறு

கொசஸ்தலை ஆற்றில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுத்து விளையாடி மகிழ்கின்றனர்

 • Share this:
  ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு வேலூர் மாவட்டம் காவேரி பக்கம் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது.  அதனைத் தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்தின் திருத்தணி, பள்ளிப்பட்டு, பகுதிகளில் உள்ள 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு இந்த ஆற்றில் இருந்து வரும் நீர் பயன்படுகின்றது.

  தற்போது ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. மழையின் காரணமாக அங்குள்ள அம்மம் பள்ளியில் உள்ள அணை நிரம்பி வழிகின்றது. அணை நிரம்பியுள்ளதால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.  அணை திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.  இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுத்து விளையாடி மகிழ்கின்றனர்.

  மேலும் இன்று 12.00.மணிமுதல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 1100 கன அடி நீர் திறக்கப் படவுள்ளது. அதன்பிறகு அங்கு தொடர் மழை  இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக பூண்டி அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அக்கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கையை மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ளார்.  முன்னதாக நிவர் புயல் கனமழை காரணமாக, சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டிருப்பதால் அடையாறு ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்க்க ஆர்வமுடன் கூடி வரும் பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதிலும் மும்முரம் காட்டினர்.
  Published by:Sankaravadivoo G
  First published: