ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் புற்றுநோய்க்கு கொரிய நாட்டு முறையில் சிகிச்சை!

சென்னையில் புற்றுநோய்க்கு கொரிய நாட்டு முறையில் சிகிச்சை!

கொரிய நாட்டு முறையில் சிகிச்சையளிக்கும் நவீன கருவி

கொரிய நாட்டு முறையில் சிகிச்சையளிக்கும் நவீன கருவி

”புற்றுநோய்க்கு கொரிய நாட்டு முறையில் சிகிச்சையளிக்கும் நவீன கருவி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது”

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  புற்றுநோய்க்கு கொரிய நாட்டு முறையில் சிகிச்சையளிக்கும் நவீன கருவி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கீமோதெரபி, ரேடியோலஜி போன்ற கதிர்வீச்சு முறையில் சிகிச்சை அளிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக தற்போது ஹைப்பர் தெர்மியா என்ற புதியமுறை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  உடலில் அதிக அளவு வெப்பத்தை செலுத்தி அதன்மூலம் நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிப்பதால், அவை புற்றுநோய் செல்களை அழித்துவிடும். இதனால் நோயிலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தமருத்துவ முறையைப் பின்பற்றி நவீன தொழில்நுட்பத்துடன் கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருத்துவ முறை பல்வேறு மேலைநாடுகளில் வழக்கத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த சிகிச்சை இன்னும் பரவலாக மக்களைச் சென்றடையவில்லை. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஹைப்பர் தெர்மியா அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  கீமோதெரபி, ரேடியோலஜி முறைகளைக் காட்டிலும் ஹைப்பர் தெர்மியா சிகிச்சைக்கு மூன்றில் ஒரு பங்குதான் செலவாகிறது. குடல், மார்பகப் புற்றுநோய்க்கு இது அதிக பலன் தருவதாகக் கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெற்றுள்ள இதனை அனைத்து மருத்துவமனைகளிலும் கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  Also see:

  Published by:Rizwan
  First published:

  Tags: Cancer, Treatment