நேப்பியர் பாலத்தில் செல்பி எடுக்க முயன்றவர் கூவம் ஆற்றில் விழுந்த பரிதாபம்

நேப்பியர் பாலத்தில் செல்பி எடுக்க முயன்றவர் கூவம் ஆற்றில் விழுந்த பரிதாபம்

செல்பி எடுக்க முயன்றவர் கூவத்தில் விழுந்த பரிதாபம்

சென்னை கூவம் நதியோரம் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற நபர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

 • Share this:
  இளைய தலைமுறையினரிடையே செல்போனின் ஆதிக்கம் அதிகம். தற்போது ஏதேனும் ஒரு மூலைமுடுக்கில் நடக்கும் பல வேடிக்கையான விஷயங்கள் முதல் பலதரப்பட்ட வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாவதற்கு செல்போன்கள் ஒரு காரணமாகின்றன. அதிலும் செல்ஃபி மக்களிடையே மிகவும் பிரபலமானவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி மோகம் யாரையும் விடவில்லை. ஆனால் இந்த செல்ஃபி மோகத்தால் பலரின் வாழ்க்கை பறிபோன விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

  இருப்பினும் மக்கள் இந்த செல்ஃபி மோகத்தில் இருந்து வெளியே வந்தபாடில்லை. அந்த வகையில் சென்னை நகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் நதியோரம் நின்று செல்பி எடுக்கமுயன்ற வாலிபர் கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். விழுந்த நபர் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பதும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணிப்புரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிகேணி தீயணைப்பு துறையினரும், மீட்பு படையினரும் அவரை மீட்டு முதலுதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  ஸ்மார்ட்போனின் பியூட்டி ஃபில்டர்ஸ் மூலம் பலரும் ஏகப்பட்ட செல்ஃபிக்களை எடுத்து வருகின்றனர். தற்போதைய உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவேற்றங்கள் போன்ற அனைத்திலும் மக்கள் தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள விரும்புவதே இதற்கு காரணம். உலகளாவிய அளவில் கூகுள் நடத்திய ஆய்வு, செல்ஃபிக்களை மேம்படுத்த ஃபில்டர்களைப் பயன்படுத்துவது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பரவலாக உள்ளதாக கூறியது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: