கூடங்குளம் அணுஉலை சைபர் தாக்குதல்! சர்வதேச அணுசக்தி முகமை விளக்கம்

அணுஉலையைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளில் இந்த மால்வேர் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து கண்காணித்து வருவதாக இந்திய அணுசக்தி கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலை சைபர் தாக்குதல்! சர்வதேச அணுசக்தி முகமை விளக்கம்
கூடங்குளம் அணுஉலை
  • News18
  • Last Updated: November 10, 2019, 9:33 PM IST
  • Share this:
கூடங்குளத்தில் நடந்த இணைய வழித் தாக்குதலில் அணுவுலையின் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏதும் பாதிக்கப்படவில்லை என்பதை இந்திய அரசு தங்களிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை(International Atomic Energy Agency)தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் வடகொரியாவைச் சேர்ந்த 'லாசரசு' எனும் குழுவால் ஹே க் செய்யப்பட்டு
டி ட்ராக் என்னும் மால்வேரால் கூடங்குளத்தின் தகவல்கள் திருடப்பட்டதாக சில தனியார் சைபர் அமைப்புகள் அண்மையில் தெரிவித்திருந்தன.


இந்த தகவல் வெளியானவுடன் அணுவுலை நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு மறுநாளே இந்திய அணுமின்சக்தி கழகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கூடங்குளம் அணு உலை கணிப்பொறியில் மால்வேர் கண்டுபிடிக்கப்பட்டது உண்மைதான். இந்திய சைபர் அமைப்பினால்(computer emergency response team)செப்டம்பர் 4 ஆம் தேதி இதுகுறித்த தகவலைத் தெரிவித்தது. உடனடியாக இந்திய அணுசக்தி துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

வெளி இணையத்துடன் இணைக்கப்பட்டு பாதிப்படைந்த ஒரு கணிப்பொறியைப் பயனாளி ஒருவர் நிர்வாகப் பணிக்கான வலைப்பின்னலுடன் இணைத்திருந்தார். இதற்கும் அணு உலையின் முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் வலைப் பின்னலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அணுஉலையைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளில் இந்த மால்வேர் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து கண்காணித்து வருவதாக இந்திய அணுசக்தி கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையிடம் கூடங்குளம் அணுவுலை மீது நடந்த இணையவழித் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு தங்களுக்கு தெரியப்படுத்தியதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். மின்னஞ்சல் வாயிலாக பதிலளித்த சர்வதேச அணுசக்தி முகமை இந்த சைபர் தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம் எனவும் கூடங்குளத்தில் உள்ள அணுவுலையின் கணினி அமைப்புகள் இந்த சைபர் தாக்குதலில் பாதிக்கப்படவில்லை என்பதை இந்திய அதிகாரிகள் தங்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் தங்களது உறுப்பு நாடுகளுக்கு தொடர்ச்சியாக இணைய வழித் தாக்குதல்களில் இருந்து அணுவுலைகளைப் பாதுகாப்பது குறித்து பயிற்சி
அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

Also see:
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்