கொங்கு மண்டலம் அ.தி.மு.கவின் எஃகு கோட்டையாக உள்ளது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனியில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது. கோவை வ.உ.சி திடலில் பிரமாண்டமான கூட்டம் நடத்தியது 2011 ல் அதிமுக ஆட்சி அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது.
தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அப்போது அகற்ற முடிந்தது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா. மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்கு கட்டிகொடுத்தவர் அவர். இந்த திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத திட்டங்களாக இருக்கின்றது.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. 100 யூனிட் மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வரிவருவாயில் 3 ல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கியது என பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் 52 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வித்திட்டவர் ஜெயலலிதா’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.