Kongu Nadu | இதுதாங்க கொங்கு நாடு... தெளிவுப்படுத்திய வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கொங்கு நாடு என்பதை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர்.

  • Share this:



    தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்த போதும் சட்டத்தில் உள்ளதை தான் நாங்கள் சொல்கிறோம், இதை பார்த்து நீங்கள் அஞ்ச வேண்டாம் என்று ஸ்டாலின் சட்டசபையில் கூறியிருந்தார்.

    மேலும் ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்ப்பு, நீட் தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தது போன்ற செயல்களால் தமிழக அரசு மீது மத்திய அரசு கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கொங்கு நாடு என்பதை பாஜக கையில் எடுத்து உள்ளது.

    Also Read : கொங்கு நாடு பகுதியை தமிழ்நாட்டில் இருந்து தனியாக பிரிக்க முடியுமா?

    இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனின் பயோடேட்டாவில் கொங்கு நாடு என்று பதிவிடப்பட்டிருந்தது. எல்.முருகனின் பயோடேட்டாவில் கொங்கு நாடு என்று இருந்ததையடுத்து பெரும் சர்ச்சையானது. இதனிடையே கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கொங்கு நாடு குறித்து தெளிவிப்படுத்தி உள்ளார். அதில்,

    கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு,காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.

    ஆகெழு கொங்கர் என்று பதிற்றுப்பத்திலும், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே என்று புற நானூற்றிலும் கொங்கு தேசம் பற்றிய விரிவான சித்திரம் தமிழ் சங்ககால இலக்கியம் முழுக்க பரந்து இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பாளையப்பட்டுக்கள் என்று கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பொருளில் மூதுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vijay R
    First published: