Kongu Nadu: கொங்கு நாடு பகுதியை தமிழ்நாட்டில் இருந்து தனியாக பிரிக்க முடியுமா?

‘கொங்கு நாடு’ என்ற யூனியன் பிரதேசம் உதயமாகிறதா? இதுதான் பாஜகவின் அடுத்த மூவ்வா?

‘கொங்கு நாடு’ என்ற யூனியன் பிரதேசம் உதயமாகிறதா? இதுதான் பாஜகவின் அடுத்த மூவ்வா?

  • Share this:
    தமிழகத்தை இரண்டாக பிரித்து ‘கொங்கு நாடு’ என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தமிழில் வெளியாகும் தினசரி நாளிதழான ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

    ஜெய்ஹிந்த் , ஒன்றிய அரசு உள்ளிட்ட விவகாரங்கள் தமிழக அரசு மீது மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘கொங்கு நாடு’ குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 லோக்சபா தொகுதிகளும், 61 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இவற்றோடு அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பகுதியை பிரித்து, அதை புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாகஅறிவிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

    Also Read: ‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுங்கள்!’ - பொருளாதார வல்லுநர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

    இதனை மையப்படுத்தியே தமிழக பாஜக நிர்வாகிகள் நியமனம் எல்லாம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல். முருகனை பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாம். கொங்கு மண்டலத்தை சேர்ந்த முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்தது. வானதி சீனிவாசன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டது எல்லாம் இந்த ‘கொங்கு நாடு’பின்னணியில் தானாம்.

    தினமலர் செய்தி


    2024ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கொங்கு நாடு யூனியன் பிரதேசத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துவக்கப்படுமாம். தமிழகத்தில் எதிர்காலத்தில் பாஜக வலுவான கட்சியாக காலுான்றவே, இந்த யூனியன் பிரதேச அஸ்திரத்தை, கையில் எடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழக அரசியலை பொறுத்தவரையில் கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்றே அறியப்படுகிறது. சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவின் கையும் கொங்கு மண்டலத்தில் கொஞ்சம் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு தான் கொங்கு மண்டலம் அதிர்ச்சி கொடுத்தது. அதன் காரணமாக கொங்கு மண்டலத்தை திமுக டார்க்கெட் செய்து பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு எடுக்கவுள்ள ‘கொங்கு நாடு’ என்ற அஸ்திரம் திமுகவுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

    Also Read: குடும்பத் தலைவிகளுக்கு ₹ 1000 எப்போ தருவீங்க.. இல்லன்னா போராட்டம் வெடிக்கும் - அதிமுக எச்சரிக்கை

    மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா,

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் சட்டப்பிரிவு, இந்திய ஒன்றிய அரசுக்கு, தன் எல்லைக்குட்பட்ட நிலங்களை மாநிலங்களாகப் பிரிக்க, மாநிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அல்லது குறைக்க, மாநில எல்லைகளில் மாற்றம் ஏற்படுத்த, மாநிலங்களின் பெயர்களில் மாற்றம் செய்ய அதிகாரம் வழங்குகிறது.

    தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாட்டை பிரிக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?

    மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மாநில பிரிப்பு என்ற பேச்சுக்கே சாத்தியமில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: