ஜெய்ஹிந்த் வார்த்தை விவகாரம்: உரையை வெட்டி பரப்புகின்றனர்: அண்ணாமலைதான் காரணம்- கொங்கு ஈஸ்வரன் விளக்கம்

கொங்கு ஈஸ்வரன்

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தொடர்பாக நான் பேசியதை வெட்டி அவதூறாகப் பரப்பிவருகின்றனர் என்று எம்.எல்.ஏ கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய
  எம்.எல்.ஏ கொங்கு ஈஸ்வரன், ‘சென்ற ஆளுநர் உரையில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று இருந்தது. ஆனால், இந்த ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. அந்த வார்த்தை இடம்பெறாதது வரவேற்கத்தக்கது என்ற வகையில் பேசியிருந்தார்.

  அவர், பேசி இரண்டு தினங்கள் கடந்திருந்தநிலையில், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறாதது வரவேற்க்கத்தக்கது என்று ஈஸ்வரன் பேசிய பகுதியை மட்டும் பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதனையடுத்து, அந்த வீடியோ வைரலானது. பா.ஜ.க தலைவர்கள் பலரும் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், ஜெய்ஹிந்த் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கொங்கு ஈஸ்வரன் விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் சட்டமன்றத்திலே ஜெய்ஹிந்த் என்ற வார்தையை பற்றி நான் பேசிய விஷயத்தை என்னுடைய உரையை முழுமையாக கேட்கமால் என்னுடைய உரையை 15 நொடிகளுக்கு எடிட் செய்து அதன்மூலம் அரசியல் செய்து வருகின்றனர்.

  மொழி சம்மந்தமாக இரு அரசின் ஆளுநர் உரையைதான் ஒப்பிட்டு பேசினேன் என்பதை உரையை முழுமையாக கேட்பவர்களுக்கு தெரிந்திருக்கும். சட்டமன்றத்திலே ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஓங்கி ஒலிக்கின்ற 17 பேர் உள்ளே இருந்தனர். பா.ஜ.க உறுப்பினர்கள் 4 பேர் உள்ளே இருந்தனர். அவர்களுக்கெல்லாம் நான் பேசியது தவறாக தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் முழு உரையையும் கேட்டனர். ஆனால், நான் பேசியத்தில் சில பகுதிகளை மட்டும் வெட்டி பரப்பி வருகின்றனர். நான் பேசி இரண்டு நாள்களில் இதுகுறித்து யாரும் பேசவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஐ.டி விங் இதனை வெட்டி பரப்பிய பிறகுதான் அனைவரும் இதுகுறித்து பேசுகின்றனர். இதனை பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்ததுதான் என்பதை அனைவரும் அறிவார்கள். இதுதொடர்பாக சந்தேகம் இருந்திருந்தால் என்னிடம் கேட்டிருக்கலாம். பழிவாங்கும் அரசியலை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக விவாதிக்க நேரம் குறிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: