ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொந்தகை அகழாய்வில் மீண்டும் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வில் மீண்டும் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வில் மறுபடியும் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் நேற்று மாலை அகழாய்வு நடந்தபோது ஒரு குழியில் எட்டு முதுமக்கள் தாழி கிடைக்கப் பெற்றன. ஏற்கனவே மார்ச் 21 தேதி ஆய்வு செய்தபோது, மனித எழும்புகள் கிடைத்திருந்தன. அவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதேபோல், இன்று மாலை மற்றொரு முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்தபோது, உள்ளிருந்து மனித எழும்புகள் ஒவ்வொரு பாகமாக கிடைத்தன. அவை தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அவருடன் உதவியாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

எழும்புகளை ஆய்வுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த எழும்புகள் 2,600 ஆண்டுகள் பழமையானதாக இருக்காலம் என கணிக்கப்படுகிறது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see:

First published:

Tags: Excavation, Tamil