• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 20 வயதுக்குள் 3 குழந்தைகள்... இள வயது திருமணத்தில் கொல்லிமலை முதலிடம்

20 வயதுக்குள் 3 குழந்தைகள்... இள வயது திருமணத்தில் கொல்லிமலை முதலிடம்

மாதிரி படம்

மாதிரி படம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோத குழந்தை விற்பனை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
    தமிழ்நாட்டிலேயே இள வயது திருமணத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள பெண்கள் 20 வயதிற்குளேயே 2 அல்லது 3 குழந்தைகளுக்கு தாயாகும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, பல்வேறு அரிய மூலிகைகளைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. இது ஒரு புறமிருக்க, குழந்தை திருமணங்களும் இங்குதான் அதிக அளவில் அரங்கேறுகிறது. கொல்லிமலை மட்டுமன்றி, அதன் அடிவாரப் பகுதிகளான நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி போன்ற கிராமங்களில் 10, 12ம் வகுப்புகளை முடித்த உடனேயோ அல்லது அதற்கு முன்னதாகவோ சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

    இதனால் சிறுமிகள் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். போதிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம் எனக் கூறும் சுகாதாரத் துறை அதிகாரிகள், இளவயது திருமணங்களால் கொல்லிமலை வாழ் பெண்கள் போதிய ஊட்டச்சத்தின்றி காணப்படுவதாகவும் எச்சரிக்கிறது.

    ஒரு பக்கம் வறுமை, படிப்பதற்கான வசதி இல்லாதது போன்றவை இவர்களை இளவயது திருமணத்தை நோக்கி தள்ளுகிறது. மற்றொரு பக்கம், காதல் விவகாரங்களில் சிறுமிகள் சிக்குவதும், அவ்வாறு சிக்கிக் கொள்வார்களோ என பெற்றோர் பயப்படுவதும் இளவயது திருமணங்களை தொடர்கதையாக்குகிறது. அதோடு, போதிய விழிப்புணர்வு இல்லாததால், 5 அல்லது அதற்கு அதிகமான பிள்ளைகளை பெற்றெடுக்கின்றனர்.

    Also Read : மணமகள் தேவை... டீக்கடைக்கு முன் போர்டு போட்ட நபருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்பு

    மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி, சுகாதாரத் துறையினருடன் இணைந்து வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் உள்ளதாகவும் உள்ளாட்சி அமைப்பினர் கூறுகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோத குழந்தை விற்பனை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதிலும், கொல்லிமலையில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவரம், காவல் துறை விசாரணையில் வெளியாகி திடுக்கிட வைத்தது. எனவே, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, இளவயது திருமணங்களை தடுக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: