ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வயலின் பரிசாக கொடுத்த காவல்துறை ஆணையர்: இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த முதியவர்!

வயலின் பரிசாக கொடுத்த காவல்துறை ஆணையர்: இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த முதியவர்!

கொல்கத்தா காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், பக்வான் மாலிக்கு, கொல்கத்தா காவல் ஆணையர் வயலின் பரிசாக கொடுக்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

கொல்கத்தா காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், பக்வான் மாலிக்கு, கொல்கத்தா காவல் ஆணையர் வயலின் பரிசாக கொடுக்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

கொல்கத்தா காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், பக்வான் மாலிக்கு, கொல்கத்தா காவல் ஆணையர் வயலின் பரிசாக கொடுக்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

  • 2 minute read
  • Last Updated :

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பின்னதாக, சாமானியர்களும் தங்கள் திறமைகளின் மூலம் பிரபலமாக தொடங்கி உள்ளனர். இதே போல பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தட்டில் உள்ளவர்கள் கூட சில நேரங்களில் திடீர் என பிரபலங்களாக மாறிவிடுகின்றனர். அது போல சமீப நாட்களாக இந்தி திரையிசை பாடல்களை தனது வயலின் மூலம் மீள் உருவாக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டார் பக்வான் மாலி என்ற முதியவர்.

மேற்குவங்கத்தின் மலைப்பிரதேசங்களான டார்ஜிலிங் மற்றும் சிலிகுரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் வயலின் மூலம் இந்தி பாடல்களை இசைப்பதே இவரின் வேலையாக இருந்து வருகிறது. சிறிது நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பிரபலமாக இருந்த இவரை கொல்கத்தா காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து கவுரவப்படுத்தியிருக்கிறார்.

Also Read:   சசிகலாவுக்கு பதிலடி: அமமுக நிர்வாகிகளை குறி வைக்கிறதா அதிமுக தலைமை?

கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் சவுமன் மித்ரா, முதியவர் பக்வான் மாலியை தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருக்கிறார். திடீரென காவல் ஆணையர் அலுவலகத்துக்கு கூட்டிச் செல்கிறார்களே என பதற்றமடைந்த அவருக்கு காவல் ஆணையர் சவுமன் மித்ரா வயலின் ஒன்றை பரிசாக தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மேலும் அவரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு காவல்துறையினரின் நிதியில் இருந்து அவருக்கு நிதி உதவியையும் அளித்திருக்கிறார்.

கொல்கத்தா காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், பக்வான் மாலிக்கு, கொல்கத்தா காவல் ஆணையர் வயலின் பரிசாக கொடுக்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதில் திறமைசாலியாக திகழும் பக்வான் மாலிக்கு காவல்துறையினரின் பரிசு என கூறப்பட்டுள்ளது.

Also Read:    'மினி பாகிஸ்தான்' என ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: லைக்ஸுக்காக இளைஞர் செய்த விபரீதம்!

கொல்கத்தா காவல் ஆணையர் மற்றும் காவல்துறையினரின் இந்த செயல் சமூக வலைத்தளத்தில் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. காவல்துறையினர் வயலின் பரிசு கொடுத்தது மட்டுமல்லாமல் அவரின் வாழ்வாதாரத்திற்காகவும் உதவி தங்களுடைய மனித நேய முகத்தை வெளிப்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதியவரான பக்வான் மாலி குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் மேற்கு வங்காளத்திற்கு வந்து டார்ஜிலிங் மற்றும் சிலிகுரியில் அமைந்துள்ள ஹோட்டல்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக வயலின் வாசிப்பு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். தொற்றுநோய் பரவலுக்கு பின்னர், ​​அவர் சம்பாதித்த அனைத்தையும் இழந்தார். அவரது மனைவியும் அவரும் தெருக்களில் வாழ வேண்டியிருந்தது, அவர் தெருக்களில் இசையை இசைக்கத் தொடங்கினார். பர்டோலா பகுதியில் உள்ள உள்ளூர் போலீசார் அவருக்கு இப்போது தங்குவதற்கு ஒரு இடத்தை வழங்கியுள்ளனர்.

First published: