Home /News /tamil-nadu /

Amazon | வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்த நபருக்கு மேகி அனுப்பிய அமேசான்

Amazon | வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்த நபருக்கு மேகி அனுப்பிய அமேசான்

அமேசான்

அமேசான்

சயான் மஜும்தார்,  பிரபல  ஆன்லைன் விற்பனைதளமான அமேசானில் கடந்த டிசம்பர் 9ம் தேதி  Racold geyser எனப்படும் வாட்டர் ஹீட்டரை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக 7,499  ரூபாயையும் அவர் செலுத்தியுள்ள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது நூடூல்ஸ், துணி துவைக்க பயன்படும் லிக்வீட் ஆகியவை இருந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் வாட்ட ஹீட்டருக்கு ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு மேகி நூடுல்ஸ், டிடர்ஜெண்ட் ஆகியவை அனுப்பப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த  சயான் மஜும்தார்,  பிரபல  ஆன்லைன் விற்பனைதளமான அமேசானில் கடந்த டிசம்பர் 9ம் தேதி  Racold geyser எனப்படும் வாட்டர் ஹீட்டரை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக 7,499  ரூபாயையும் அவர் செலுத்தியுள்ள்ளார்.  சில நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் கிடைத்துள்ளது. இதையடுத்து வாட்டர் ஹீட்டரை குளியலறையில் மாட்டுவதற்காக அவரது குடும்பத்தினர் பார்சலை பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

    காரணம்,வாட்டர் ஹீட்டருக்கு பதிலாக மேகி நூடூல்ஸ், டிடர்ஜெண்ட் ஆகியவை அவருக்கு பார்சலில் அனுப்பப்பட்டதே. இதையடுத்து அமேசான் நிறுவனர் Jeff Bezos மற்றும் அமேசான் இந்தியா நிறுவனத்தை டேக் செய்து , “வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்த எனக்கு என்ன கிடைத்துள்ளது என்பதை பாருங்கள். இது தொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பேசியபோது மன்னிப்புக்கோரும்  பண்பு கூட அவர்களிடம் இல்லை. என்ன மாதிரியான வாடிக்கையாளர் சேவை இது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    பின்னர் இது குறித்து Moneycontrol ஊடகத்துக்கு பேட்டியளித்த சயான், இந்த விவகாரம் தொடர்பாக அமேசான் வாடிக்கையாளர் மையத்தை தொடர்புகொண்டு பேசியதாகவும் தனது பணத்தை திருப்பி தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறினார்.  இது தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட குழுவிற்கு அனுப்பியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: கள்ளக்காதலியுடன் தனிக்குடித்தனம்... தேடிவந்த கணவரை பார்த்ததும், செய்வதறியாது 5வது மாடியில் இருந்து குதித்து உயிரைவிட்ட இளைஞர்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Amazon, Kolkata, Maggi

    அடுத்த செய்தி