• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமைச்சரின் தலையீடு என சந்தேகம் இருந்தது; தற்போது அது உறுதியாகியுள்ளது...! கொளத்தூர் மணி

அமைச்சரின் தலையீடு என சந்தேகம் இருந்தது; தற்போது அது உறுதியாகியுள்ளது...! கொளத்தூர் மணி

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஈரோடு மாவட்டத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண், பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணை கடத்தியதாக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த குரும்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி, கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் ஆகியோர் 3 ஆண்டுகளாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

    வேறு சாதி என்பதால், திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் கொளத்தூரில், தி.வி.க. ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, இளமதியை அவரது பெற்றோர் கடத்திச் சென்றதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் செல்வன் புகார் அளித்தார். இந்நிலையில், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான இளமதி, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

    மேலும், பெண்ணின் வழக்கறிஞர் அளித்த புகாரில் இளம்பெண்ணை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, நிர்வாகிகள் ஈஸ்வரன், சரவணன் மற்றும் செல்வன் மீது பவானி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்குப்பதிவு தொடர்பாக தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், “இந்த விவகாரத்தில் இளமதி கடத்தப்படும் போது உடன் இருந்தவர்கள் மீதும், என் மீதும், மணமகன் மீதும் கடத்தல் வழக்கு பதிவாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும். அமைச்சர் ஒருவரின் தலையீடு இருப்பதாகவும் ஒரு சந்தேகம் இருந்தது. தற்போது வழக்கு பதிவை வைத்து அந்த சந்தேகம் உறுதியாகியுள்ளது,

    உண்மையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அன்றே வழக்கு பதிவு தகவல் வெளிவந்திருக்கும். ஆனால் தற்போது முன்தேதியிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. இதுபோன்ற பொய் வழக்குகள் எங்களுக்குப் புதிதல்ல. இந்த வழக்கை உரியவகையில் சந்திப்போம். இதற்கு துணை நின்றவர்களை நிச்சயமாக அம்பலப்படுத்தி பொது வெளியில் கொண்டு வருவோம்.

    தங்களது அரசியல் அதிகாரத்தை விருப்பம்போல் பயன்படுத்துவோரை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. அவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். இந்த வழக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம், விரும்பி திருமணம் செய்தவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

    இளமதியை பெற்றோருடன் அனுப்பும் காவல்துறை, பெண்ணின் அப்பா, மாமா, பெரியப்பா உள்ளிட்டோர் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும்போது அவரை பெற்றோர்கள் பொறுப்பிலேயே அனுப்புவது உகந்ததா? என்பதை யோசிக்க வேண்டும். திங்கள் (நாளை) அன்று நீதிமன்றத்தில் இளமதி ஆஜர்படுத்தும் போது உரிய ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று நம்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: