கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வெளியிட்ட பிரத்யேக செய்திகளின் அடிப்படையில், சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீலகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பல விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கள ஆய்வு மூலம் பிரத்யேக செய்திகளை வெளியிட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று கூடலூர் வழியாக 7 கொள்ளையர்கள் தப்பிய நிலையில், 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
இதற்கிடையே, 11,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு போலீசார் தங்களை விடுவித்ததாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதுதொடர்பாக சம்பவத்தன்று பணியில் இருந்த காவலர்கள், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை அதிகாரியான பாலசந்தரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில், பிற காவலர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Kodanadu estate