கோடநாடு வீடியோ விவகாரம்: தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை தலைவர் ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Web Desk | news18
Updated: January 12, 2019, 4:55 PM IST
கோடநாடு வீடியோ விவகாரம்: தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
மேத்யூஸ்
Web Desk | news18
Updated: January 12, 2019, 4:55 PM IST
கோடநாடு வீடியோ விவகாரத்தில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் உள்ளிட்ட அந்த வீடியோ பதிவில் பேசிய அனைவர் மீதும் சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் தொடர் கொலை சம்பவங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் போன்ற ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டார். இந்த வீடியோ பதிவில் பல சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் சில சர்ச்சை தகவல்கள் இந்த வீடியோவில் உள்ளன.

இதையடுத்து கோடநாடு வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இன்று காலை துணை முதல்வர், அமைச்சர்கள் சகிதமாக முதல்வர் எடப்பாடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த வீடியோவில் வெளியாகி உள்ள தகவல்களில் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது சென்னை காவல்துறையினர், மேத்யூஸ் உள்ளிட்ட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத் தலைவர் ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே வித்தியாசமில்லை- அகிலேஷ் யாதவ்
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...