கோடநாடு கொலை வழக்கு- கனகராஜ் பணியாற்றிய கம்பெனி உரிமையாளரிடம் விசாரணை

Youtube Video

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜ் பணியாற்றிய ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனி உரிமையாளரிடம் உதகை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 • Share this:
  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் மறு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

  இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான், கனகராஜின் சகோதரர் தனபால் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கனகராஜின் நெருங்கிய நண்பர்களான குழந்தைவேலு, சிவன் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடைபெற்றது. அதில், குழந்தைவேலு முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவரிடம் 5 மணி நேரமாக துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

  இந்நிலையில், கனகராஜ் பணியாற்றிய ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியின் உரிமையாளர் திருமூர்த்தியிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

  உதகையில் உள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் திருமூர்த்தியிடம் எஸ்.பி ராவத், டிஎஸ்பி சந்திர சேகர் உள்ளிட்டோர் ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் 103 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 40 பேர் வரை விசாரிக்கப்பட்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், வழக்கில் சேர்க்கப்படாத வெளிநபர்களையும் அழைத்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கனகராஜின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
  Published by:Karthick S
  First published: