மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. ஓம் பகதூர் என்ற காவலாளியை கொலை செய்த கும்பல், கிருஷ்ண தாப்பா என்ற மற்றொரு காவலாளியை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார்.
இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அப்போதைய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா, 5 தனிப்படைகளை அமைத்தார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்த நிலையில், 2017 ஏப்ரல் 28-ல் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இனோவா கார் மோதி கனகராஜ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் மற்றொரு குற்றவாளியான சயான் கேரளாவில் கார் விபத்தில் சிக்கினார். இதில் சயானின் மனைவி மற்றும் 5 வயது மகள் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சயான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேர் மே மாதம் கைது செய்யப்பட்டனர். கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றியவர் ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
2017-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி 300 பக்கங்கள் கொட குற்றப்பத்திரிகையை கோத்தகிரி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில், 11 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டதுடன், 97 பெயர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருந்தது.
குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், 2019, ஜனவரியில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உடன் இணைந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடநாடு கொலை, கொள்ளைக்கும் தொடர்பு இருப்பதாகவும் சயானும், மனோஜும் குற்றம்சாட்டினர்.
அவதூறு பரப்புவதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சயானும், மனோஜும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். ஆனால் உடனடியாக அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
நிபந்தனை ஜாமினில் இருந்தவர்கள் விசாரணைக்கு ஆஜராகததால் மார்ச் மாதம் கேரளாவில் வைத்து மீண்டும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2019 மார்ச் 21-ல் சயான் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து நவம்பர், 2019-ல் சயான் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜூலையில் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சயான் மனு தாக்கல் செய்தது. இவரது மனுவை ஏற்ற நீதிபதி நீலகிரிலேயே தங்கியிருந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kodanadu estate, News On Instagram