Home /News /tamil-nadu /

அக்கா மிகவும்‌ நேசித்த இடம்‌ கோடநாடு.. அந்த பங்களாவை நாங்கள் கோயிலாகத்தான் பார்த்தோம்... சசிகலா

அக்கா மிகவும்‌ நேசித்த இடம்‌ கோடநாடு.. அந்த பங்களாவை நாங்கள் கோயிலாகத்தான் பார்த்தோம்... சசிகலா

சசிகலா

சசிகலா

vk sasikala: காவல்துறையை சேர்ந்தவர்கள்‌ என்னிடம்‌ கேட்ட கேள்விகள்‌ அனைத்திற்கும்‌ பதில்‌ அளித்து இருக்‌கிறேன்‌. முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன்‌ என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கோடநாடு எஸ்டேட்டில்‌ நடந்த கொலை மற்றும்‌ கொள்ளை சம்பவத்‌திற்கு காரணமானவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்களை தண்டிக்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் (Kodanadu Estate) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 23-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதபா காயமடைந்தார்.

    இந்த வழக்கில் சம்மந்தப்பட்டதாக கூறப்பட்ட சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஏப்.,28ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் 103 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில் 40 நபர்களுக்கு மேல் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக கோடநாடு மேனேஜர் நடராஜ் , மின் உதவிபொறியாளர் மற்றும் தடயவியல் நிபுணர்களிடம் தனிப்படை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 2 நாட்களாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே கோடநாடு வழக்கு விசாரணை தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாட்டில்‌ உள்ள எங்களது எஸ்டேட்டில்‌ நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம்‌ தொடர்பாக நேற்றும்‌ இன்றும்‌ என்னிடம்‌ விசாரணை நடத்தப்பட்டது.

    காவல்துறையை சேர்ந்தவர்கள்‌ என்னிடம்‌ கேட்ட கேள்விகள்‌ அனைத்திற்கும்‌ பதில்‌ அளித்து இருக்‌கிறேன்‌. முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன்‌.

    விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது.. அரசை சாடிய டிடிவி தினகரன்!!

    கோடநாடு எஸ்டேட்‌ என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால்‌ ஒரு சாதாரண இடமாக இருக்கலாம்‌, ஆனால்‌ என்னை பொருத்தவரை, என்‌ அக்கா அவர்கள்‌ மிகவும்‌ நேசித்த இடம்‌, அவர்களுக்கு நிறைய மன அமைதியையும்‌, சந்தோஷத்தையும்‌ கொடுத்த ஒரு இடம்‌ உண்டு என்றால்‌ அது கோடநாடுதான்‌. எங்களை பொருத்தவரையில்‌ கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத்தான்‌ பார்த்தோம்‌. எங்கள்‌ கட்‌சிக்காரர்களும்‌ அப்படிதான்‌ பார்த்தார்கள்‌.

    இது போன்றதொரு முக்‌கியத்துவம்‌ வாய்ந்த எங்களது இடத்தில்‌, விரும்பத்தகாத சம்பவம்‌ நடைபெற்ற சமயத்தில்‌ நானும்‌ சிறையில்‌ இருந்தேன்‌. இந்த சம்பவத்தில்‌ எங்களிடம்‌ நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம்‌ பகதூர்‌ கொலை செய்யப்பட்டு, கொள்ளையும்‌ நடந்துள்ளது.

    அதோடு மட்டுமல்ல, இந்த சம்பவத்துற்கு தொடர்புடையவர்கள்‌ ஒவ்வொருவராக சந்தேகத்துற்குரிய வகையில்‌ தொடர்ச்சியாக மரணம்‌ அடைந்துள்ளார்கள்‌. இதில்‌ எந்த பாவமும்‌ அறியாத சின்ன குழந்தையும்‌ அவரது தாயும்‌ பலியாகி உள்ளனர்‌.

    எனவே, காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, இதில்‌ சம்பந்தப்பட்டவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்‌ என்பதே எனது வேண்டுகோள்‌.

    இந்த சம்பவத்தில்‌ தங்கள்‌ இன்னுயிரை இழந்த, ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்களது காவலாளி ஓம்‌ பகதூர்‌, பிஞ்சுமனம்‌ மாறாத சின்ன குழந்தை மற்றும்‌ அவரது தாயார்‌ ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும்‌ என்றும்‌ கேட்டு கொள்கிறேன்‌. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, Kodanadu estate, Sasikala

    அடுத்த செய்தி