நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் (Kodanadu Estate) மறைந்த முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 23-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதபா காயமடைந்தார்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்டதாக கூறப்பட்ட சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஏப்., 28ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 103 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில் 40 நபர்களுக்கு மேல் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக கோடநாடு மேனேஜர் நடராஜ் , மின் உதவிபொறியாளர் மற்றும் தடயவியல் நிபுணர்களிடம் தனிப்படை போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read : நானே ஈபிஎஸ் கார்ல ஏறப்போனேன்.. உதயநிதி கலகல ‘நச்’ கமெண்ட் அடித்த அன்பில் மகேஷ்
அண்மையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 5 மணி நேரமாக விசாணை நடைபெற்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கியமரவான ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், ஆறுக்குட்டியிடம் ஓட்டுநராக சில காலம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் இன்றைய விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் (VK Sasikala) நாளை காலை 10 மணிக்கு விசாணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் போது இந்த வழக்கு சம்மந்தபான முக்கிய கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.