முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை

சசிகலா

சசிகலா

Kodanad murder case : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்ட பங்களாவில் 2017 ம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஜெயா டிவி இயக்குனர் விவேக், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,  முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி, ஆறுகுட்டியின் மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாரயணன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி ஆகியோரிடம தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து  விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இன்று சென்னையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த விசாரணைக்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

சென்னையிலுள்ள சசிகலாவின் இல்லத்தில் இன்று விசாரணையானது நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை உயர்மன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடுத்து இருந்தனர். அதில் சசிகலா, சுதாகரன், இளவரசி, அப்போதைய  மாவட்ட ஆட்சியர் சங்கர், அப்போதைய  மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் முரளி ரம்பா , முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கு தொடுத்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவரான சசிகலாவிடம் இதுவரை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படாத நிலையில், முதல் முறையாக சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Must Read : மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியிலேயே மின்வெட்டு.. விவசாயிகள் புலம்பல்

இந்த விசாரணையில் சசிகலா அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மற்ற முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணை வளையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட முக்கிய பிரமுகர்களிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடத்த படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kodanadu estate, Sasikala