கோடநாடு வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

கோடநாடு பங்களா

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 • Share this:
  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்தது முதல் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

  முக்கிய சாட்சியமாக கருதப்படும் சயானிடம், மேல் விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, வழக்கில் அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு, தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.

  உதகை நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரப்பட்டது.

  Also Read : காவல்துறை, குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  இதையேற்ற நீதிமன்றம், செப்டம்பர் 2ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, முக்கிய சாட்சிகளான கோடநாடு மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன் மற்றும் மின்சார வாரிய கோத்தகிரி உதவி பொறியாளர் ஆகியோரிடம், இன்று முதல் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: