• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொடநாடு விவகாரத்தில் மேல் விசாரணைக்கு தடைகோரிய மனு: மூன்று நாட்களில் தீர்ப்பு!

கொடநாடு விவகாரத்தில் மேல் விசாரணைக்கு தடைகோரிய மனு: மூன்று நாட்களில் தீர்ப்பு!

கொடநாடு வழக்கு

கொடநாடு வழக்கு

வழக்கு விசாரணையின்போது கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் பல மர்மங்கள் உள்ளது என்றும் கொடநாடு எஸ்ட்டேடின் பங்குதாரர் சசிகலா இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

  • Share this:
    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கொடநாடு கொலை, கொள்ளை  வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கொடநாடு சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இவ்விகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  கொடநாடு விவகாரம் தொடர்பாக  சசிகலா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதேவேளையில், இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி  சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  தாங்கள் சொல்வது போல் வாக்குமூலம் அளிக்கும்படி, பல தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருகிறது என்றும்  ஏற்கனவே தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் மேல் விசாரணை நடத்த அவசியம் இல்லை என்றும் மனுதாரர் ரவி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிக்க: ரைஸ்மில் ஓனர் மகனை காருடன் கடத்திய கும்பல்.. 6 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி வேட்டை


    நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ள மனுதாரர், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    அதேவேளையில்,  கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் பல மர்மங்கள் உள்ளது என்றும் கொடநாடு எஸ்ட்டேடின் பங்குதாரர் சசிகலா இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் படிக்க: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்!


    உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்துவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என்றும் காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மனுதாரர் மிரட்டப்பட போவதில்லை; தன் வழக்கறிஞருடன் ஆஜராகலாம் என்றும் காவல்துறை கூறியது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், வழக்கின் தீர்ப்பை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். அதுவரை  யாரையும் விசாரணைக்கு அழைக்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: