சுற்றுலா பயணிகள் மனம் கவரும் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில் தமிழகத்தில் முதன் முறையாக ஏரி மேல் ஜிப்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இதில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட 12 மைல் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது, இந்நிலையில்,கொடைக்கானல் மேல்மலை கிரமமான மன்னவனூர் மலைக்கிராமத்தில் சூழல் சுற்றுலா மையம் கடந்த 2013ஆம் வருடம் வனத்துறையினர் மூலம் துவங்கப்பட்டு பரிசல் சவாரி, ஹயாக் சவாரி, குதிரை சவாரி போன்றவை ஏற்படுத்தப்பட்டு இன்றளவிலும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் மன்னவனூர் சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக தமிழகத்தில் முதன் முறையாக ஏரி மேல் ஜிப்லைன் மூலம் சவாரி செய்வது தற்போது துவங்கப்பட்டுள்ளது, சுமார் 250 மீட்டர் தூரம். 50 வினாடிகளில் 45 கிலோ எடை முதல் 75 கிலோ வரை எடை கொண்ட சுற்றுலா பயணிகள் இரண்டு மலைமுகடுகளின் இடையில் மேற்புறத்தில் இருந்து கீழ் புறத்திற்கு சென்றடைய ஜிப்லைன் மூலம் சவாரி செய்வது துவங்கப்படுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலையில் இனி படி பூஜை பாதிக்கப்படாது... ஹைட்ராலிக் கூரை அமைக்க முடிவு...
மேலும் ஜிப்லைன் சவாரி செய்வதற்கு நபர் ஒருவருக்கு 500 கட்டணம் வரை நிர்ணயிக்கப்பட்டு தலைக்கவசம்,பிரத்தியேக பாதுகாப்பு உடை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஜிப்லைனில் சவாரி மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ஏரியின் மேற்புறத்தில் இருந்து பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்வெளிப்பகுதிகளையும்,ஏரியின் அழகினையும், பசுமையுடன் கூடிய மலை முகடுகளையும் கண்டு ரசித்து சவாரி மேற்கொண்டு உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் ஜிப்லைன் சவாரி செய்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மன்னவனூர் சூழல் சுற்றுலா தளத்தில் சிறுவர்களை கவரும் விதமாக சிறுவர்கள் பூங்கா அமைப்பதற்காக பணிகளை மேற்கொண்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: ஜாபர்சாதிக் -கொடைக்கானல் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.