காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை காதலனுடன் இணைந்து கொலை செய்த பள்ளி மாணவி!

காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை காதலனுடன் இணைந்து கொலை செய்த பள்ளி மாணவி!
  • News18
  • Last Updated: November 27, 2019, 12:23 PM IST
  • Share this:
கொடைக்கானல் அருகே காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை தனது காதலனுடன் இணைந்து கொலை செய்த 11-ம் வகுப்பு மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பின்னர், முருகானந்தம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் அதே பகுதியில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். முருகானந்தம் வேலைக்காக சென்னை சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுந்தரி கடந்த 22-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சுந்தரி வீட்டில் தங்கி இருந்த முருகானந்தத்தின் சகோதரி மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 11-ம் வகுப்பு மாணவியான அவர், காதலுடன் தனிமையில் பேசி கொண்டிருந்த தன்னை கண்டித்ததால், துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி சுந்தரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் இரவு முழுவதும் சுந்தரியின் சடலத்துடன் தூங்கிவிட்டு, மறுநாள் காலை ஊர்மக்களுக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து 11-ம் வகுப்பு மாணவியை கைது செய்த போலீசார், மதுரை சிறார் சீர்சிருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரது காதலனான 11-ம் வகுப்பு மாணவனை தேடி வருகின்றனர்.Also see...
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading