கொடைக்கானலுக்கு கோடை சீசன் துவங்கியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு அதிகரித்து காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மலர் கண்காட்சி உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனையடுத்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று 59-வது மலர் கண்காட்சி துவங்க உள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த வருடம் 13 ஆடி உயரம் கொண்ட திருவள்ளுவர் உருவம், புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு, சிங்சாங், ஸ்பைடர் மேன், 20 அடி நீளம் கொண்ட டைனோசர்,மயில் உள்ளிட்ட உருவங்களை மலர்களை கொண்டு அலங்கரித்துள்ளனர்.
இன்று நடைபெற உள்ள விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர், உணவு துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர், சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருகின்றனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காவல்துறையினர்
இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் போக்குவரத்தை சீரமைக்க கூடுதலாக 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் காவல் துறையினர் நியமித்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மலைச்சாலையில் பழுதாகி நின்றால் அதனை சீர் செய்வதற்கும் மெக்கானிக்குகளையும் காவல் துறையினர் நியமித்துள்ளனர்.
செய்தியாளர் : ஜாபர்சாதிக் (கொடைக்கானல்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.