கருப்பு நிற கேரட்: கொடைக்கானல் விவசாயி்யின் புதிய முயற்சிக்கு கைமேல் பலன்!

கருப்பு நிற கேரட்

மற்ற கேரட்டை போலவே இந்த கருப்பு கேரட் 90 நாட்கள் விவசாயமாகவும், இந்த கருப்பு கேரட் சீனாவை பூர்விகமாக கொண்டு சீனா மற்றும் இந்தியாவில் கருப்பு கேரட் பயிரிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

  • Share this:
கொடைக்கானலில் கருப்பு நிறத்திலான கேரட் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேந்தவர் ஆசீர் இவர் விவசாயத்தில் ஆர்வம் கொண்டு மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் ஆன் லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை வாங்கி அவரது தோட்டத்தில் சுமார் 5 சென்ட் பரப்பளவில் கருப்பு கேரட்டை விவசாயம் செய்துள்ளார். பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் தான் நாம் கேரட்டை பார்த்திருக்கிறோம் ஆனால் இது கருப்பு நிறத்தில் இருப்பது பார்வைக்கு சற்று விநோதமாக உள்ளது. .

மற்ற கேரட்டை போலவே இந்த கருப்பு கேரட் 90 நாட்கள் விவசாயமாகவும், இந்த கருப்பு கேரட் சீனாவை பூர்விகமாக கொண்டு சீனா மற்றும் இந்தியாவில் கருப்பு கேரட் பயிரிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கருப்பு கேரட்டில் சுவை அதிகமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், அறிவாற்றலை அதிகரித்தல், செரிமானத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய இந்த அபூர்வ வகையை சேர்ந்த கருப்பு கேரட்டை விவசாயம் செய்து அசத்தியுள்ளார் விவசாயி ஆசீர்.

வழக்கமான கேரட்டை விட கூடுதல் சத்துக்கள் நிறைந்தது கருப்பு கேரட். வழக்கமான கேரட்டை விட சுவை சற்று மாறுபட்டே உள்ளது.

கருப்பு நிறத்திலான கேரட்டை அருகில் உள்ள விவசாயிகள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்,கொடைக்கானல் மலை பகுதியில் புது முயற்சியில் ஈடுபட்டு விளைந்துள்ள இந்த கருப்பு கேரட்டை மற்ற விவசாயிகள் விவசாயம் செய்து பலன் அடையும் மாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கருப்பு நிற கேரட் விளைச்சல் நல்ல முறையில் இருந்ததை அடுத்து அதிகபரப்பில் பயிரிட திட்டமிட்டுள்ளார் விவசாயி ஆசீர்.

மரபு ரீதியிலான விவசாயத்தில் இருந்து மாறுபட்டு மாற்று முயற்சிகளில் ஈடுபட்டு பிறருக்கு முன் உதாரணமாக மாறியிருக்கும் விவசாயி ஆசீரின் முயற்சியை அப்பகுதியினர் பாராட்டியுள்ளனர்.
Published by:Arun
First published: