திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 59- வது மலர் கண்காட்சி 24- ஆம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை சீசனான மே மாதத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைவிழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைதுறை மூலமாக மலர்கண்காட்சியும், சுற்றுலாதுறை மூலமாக 24. 05.2022 முதல் 02.06.2022 வரை பத்து நாட்கள் கோடை விழாவும் நடத்தப்பட உள்ளது.
இவ்விழாவில் பத்து நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மலர்கண்காட்சி நடத்தபடாத நிலையில், நடைபெறவுள்ள மலர்கண்காட்சியை காண சுற்றுலாபயணிகள் மிகுந்தஆர்வமுடன் உள்ளனர்.
மேலும் இரண்டு நாட்கள் மட்டும் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் மலர்கண்காட்சி முதன் முறையாக இந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெறுவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்- ஜாபர்சாதிக்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.