24 வயது இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்திய 42 வயது கள்ளக்காதலி... கொடைக்கானலில் பரபரப்பு

Youtube Video

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரதீப் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  கொடைக்கானலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக தெரிவித்த கள்ளகாதலனை காதலி கத்தியால் தலையில் குத்திய கொடூரம் நடந்துள்ளது.

  கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது பிரதீப். டிரைவராகவும், சுற்றுலா வழிகாட்டியாகவும் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே 42 வயதான பிரமிளா என்பவர் 6 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த நிலையில் தனியாக வசித்துள்ளார்.

  பிரமிளாவும் பிரதீப்பும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தன்னைவிட இருபது வயது இளையவரான பிரதீப்புடன் பிரமிளாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்துவந்ததாக தெரிகின்றது

  இந்நிலையில் பிரதீபுக்கு அவர்களது பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த தகவலை பிரதீப் தனது கள்ளக்காதலி பிரமிளாவிடம் கூறியுள்ளார். மேலும் பிரமிளா பிரதீப்பின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இல்லாமல் தன்னை தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

  இதற்கிடையே தீபாவளி தினத்தன்று இருவரும் காலை தீபாவளி பன்டிகையை கொண்டானடியுள்ளனர். மாலை காதல் ஜோடிகளுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கள்ளக்காதலி பிரமிளா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதீப்பின் மார்பிலும் தலையிலும் சரமாறியாக குத்தியுள்ளார். அளறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரதீப் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி பிரதீப்பின் தாய் ரூபி ஸ்டெல்லா கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். கள்ளக் காதலனை கத்தியால் குத்திய கள்ளக்காதலி பிரமிளாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
  Published by:Vijay R
  First published: