• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுகவின் கொள்கை தெரிந்தும் ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது : மா.சுப்பிரமணியன்

திமுகவின் கொள்கை தெரிந்தும் ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது : மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

திமுக கொள்கை தெரிந்தும் கூட ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததை ஏற்றுக்கொள்ள முடியாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

  • Share this:
    மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டையில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பப்படுவோரிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

    உள்ளாட்சித் தேர்தல்களை அதிமுக அரசு நடத்தாமல் காலம் கடத்தி வந்தது. நெருக்கடி ஏற்பட்ட பிறகு குறிப்பிட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை மட்டும் அதிமுக அரசு நடத்தியது. முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தலைகளை உடனடியாக நடத்துவோம் என்று அறிவித்தார்கள்.

    அதன்படி, அதிமுக ஆட்சியில் நடத்தப்படாமல் இருந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி திமுக மகத்தான வெற்றியை பெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இன்றும் நாளையும் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

    தொடர்ந்து அவரிடம் மேயர் தேர்தல் நேரடியாகவா மறைமுகமாகவா நடைபெறும் என கேட்டதற்கு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிறிய மாற்றம் செய்தாலும் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. எனவே 2019ல் அதிமுக ஆட்சியில் பொது வார்டு, பெண் வார்டு, ஆதிதிராவிடர் என வகுத்த வரையறையின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும். மேயர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும் என அதிமுக கடைசியாக கூறியது. அதன்படியே தற்போதும் நடத்தப்படும் என்றார்.

    சென்னை ஐஐடியில் தமிழ்தாய் பாடல் புறக்கணிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, திமுக கொள்கை தெரிந்தும் கூட ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றார்.

    ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பிய போது, ஜெய்பீம் நல்ல படம். அது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டேன். நடிகர் சூர்யா பதிலளித்திருந்தார். இதற்கு மேல் இந்த விவகாரத்தில் எதுவும் கூற விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: