ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல்

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல்

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு

Ramajeyam Murder Case | கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிபடப்பட்ட கவரில் அறிக்கையாக சிறப்பு புலனாய்வு குழு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்தது.

  தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை

  செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

  Also Read : கேபிள் டிவி சேவையில் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு!

  இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தார்.

  விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருதாகவும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Madras High court, Ramajeyam Murder Case