முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘நாங்க என்ன சங்கர மடமா நடத்துறோம்? நாங்கள் நடத்துவது அரசியல்’ - அமைச்சர் கே.என்.நேரு

‘நாங்க என்ன சங்கர மடமா நடத்துறோம்? நாங்கள் நடத்துவது அரசியல்’ - அமைச்சர் கே.என்.நேரு

கே.என்.நேரு

கே.என்.நேரு

 KN Nehru : திருச்சியில் நடந்த கூட்டத்தில்,  அதிமுகவினரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,  நாங்கள் சங்கரமடம் நடத்தவில்லை என்று கூறி விளக்கம் அளித்தார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருச்சி பொன்மலைப்பட்டியில், திமுக தெற்கு மாவட்டம் சார்பில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், ஓராண்டில் நேரு, 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால் அதை அரசு எடுத்துக் கொள்ளட்டும். மக்களுக்காக செலவழித்து கொள்ளட்டும். முடிந்தால் உங்களுடைய (அதிமுக) கட்சிப் பிரச்னையை தீர்த்துவிட்டு எங்களிடம் வந்து பேசுங்கள். நான் சொல்வது பொய் என்றால் என் மீது வழக்கு போடுங்கள் என்று நேரு பேசியுள்ளார்.

முடிந்தால் நீங்கள் (குமார்) வழக்குப் போட்டு எங்களை உள்ளே தள்ளுங்கள். என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட, 19 வழக்கு போட்டீர்கள். அதை எல்லாம் தாண்டி தான் தற்போது மந்திரியாக உள்ளோம்.  'நேரு மனிதர் புனிதர் அல்ல' என்று கூறி உள்ளீர்கள். நேரு புனிதனாக இருந்தால் வாயில் வெண்ணை தடவி படுக்கப்போட்டு போயிருப்பீர்கள்.

நாங்கள் என்ன சங்கர மடமா? நடத்துகிறோம். நாங்கள் நடத்துவது அரசியல் தான். நீங்கள் கூறுவதற்கு எதிர்க்கும் நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் ஆளும் கட்சி. நீங்கள் என்னைப் பற்றி பேசியது திருவெறும்பூர் கூட்டத்தில் என்பதால், உங்களுக்கு இங்கே பதில் சொல்கிறேன் என்றார்.

Must Read : தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

மேலும், சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம். நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம். எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

First published:

Tags: DMK, K.N.Nehru, Trichy