முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வடசென்னையில் பழைய கழிவுநீர் குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்... விரைவில் பணிகள் தொடங்கும் - அமைச்சர் கே.என்.நேரு

வடசென்னையில் பழைய கழிவுநீர் குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்... விரைவில் பணிகள் தொடங்கும் - அமைச்சர் கே.என்.நேரு

கே.என்.நேரு

கே.என்.நேரு

TN Assembly : வடசென்னை முழுவதும் பழைய கழிநீர் குழாய்களை அகற்றப்பட்டு புதிய கழிவு நீர் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.198 கோடி மதிப்பிட்டில் டெண்டர் விடபப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக சட்டப்பேரவையில கேள்வி நேர்த்தில் பேசிய ராயபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, ராயபுரம் தொகுதியில் புதிய கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே.நகர் மட்டுமல்லாது, வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவு நீர் குழாய் 3 ஆயிரம் கோடி செலவில் அமைப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதனால் வடசென்னையில் எங்கேயும் கழிவுநீர் தேங்காமல் செல்லாமல் இருக்கும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

Must Read : 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

மேலும், எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் பணிகளில் சில காலம் தொய்வு ஏற்பட்டது.

தற்போது ஒவ்வொரு நகரமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு வருவதாகவும், மதுரை உள்பட 10 நகரங்களிலும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

First published:

Tags: K.N.Nehru, TN Assembly