Home /News /tamil-nadu /

பங்காரு அடிகளார் முன் அமைச்சர் நேரு அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரல்... தி.மு.க எம்.பி. செந்தில் குமார் விமர்சனம்?

பங்காரு அடிகளார் முன் அமைச்சர் நேரு அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரல்... தி.மு.க எம்.பி. செந்தில் குமார் விமர்சனம்?

பங்காரு அடிகளார் முன் அமைச்சர் நேரு அமர்ந்திருக்கும்படியான புகைப்படம் வைரலாகி வருகிறது. (Pic: Twitter)

பங்காரு அடிகளார் முன் அமைச்சர் நேரு அமர்ந்திருக்கும்படியான புகைப்படம் வைரலாகி வருகிறது. (Pic: Twitter)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாருடனான தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியாரின் கோட்பாடுகளான கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, சுய மரியாதை, ஆகிய கொள்கைகளை பின்பற்றிய அண்ணா, கருணாநிதி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட கட்சி திமுக. தொடக்க காலத்தில் அந்த கட்சியினரின் பெரும்பாலானோரின் கொள்கையும், கட்சியின் அடையாளமாகவும் மாறியிருந்தது. தற்காலத்தில், கடவுள் பக்தியுடன் இருப்பவர்களும், முக்கிய பொறுப்புகளில் இருப்பதையும் காண முடிகிறது.  இந்நிலையில்,  கட்சியின் முக்கியமானவரும், தமிழக அமைச்சரவையின் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவருமான கே.என்.நேரு, மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மீக குரு பங்காரு அடிகளாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பங்காரு அடிகளார் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், கே.என்.நேரு தரையில் அமர்ந்திருப்பது போலவும், புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

    இந்தப் புகைப்படம் இன்று இணையத்தில் பரவி பேசுபொருளாகி உள்ளது. சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்ட கட்சியின் மூத்த தலைவர் இப்படி தரையில் உட்காரலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதனிடையே, தி.மு.க எம்.பி செந்தில் குமார் பதிவிட்ட டிவிட்டர் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.



    அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    கே.என். நேருவை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், அவருக்கான பதிவாகவே கருதி, பின்னூட்டத்தில் கலவையான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் எழுதி வருகின்றனர்.

    அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published:

    Tags: KN Nerhu

    அடுத்த செய்தி