குடும்பத் தலைவியை இழந்தவர்களுக்கு ரூ.1,000 உண்டா? கே.என்.நேருவிடம் கேள்வி கேட்ட நபர்

கே.என்.நேரு

திருச்சியில் தி.மு.க வேட்பாளர் கே.என்.நேருவிடம் குடும்பத் தலைவியை இழந்தவர்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பீர்களா என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தச் சட்டமன்றத்தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய போட்டிபோட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ’குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், ‘குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாயும், ஆண்டுக்கு 6 சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்’ என்று தெரிவிகப்பட்டிருந்தது.

இந்தநிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் ஶ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆண்டவர் கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மணப்பாறை மற்றும் ஶ்ரீரங்கம் பகுதிகளில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு முடித்தார். மேலும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியமான திட்டங்கள் பற்றியும் பேசினார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் மைக்கை வாங்கி தி.மு.க தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்து உள்ளீர்கள், ஆனால் குடும்ப தலைவி இழந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு இருக்கா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கே.என்.நேரு. இதுஒரு நல்ல கேள்வி தான். கண்டிப்பாக தலைவரிடம் சொல்கின்றேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். இந்த கேள்வியை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். இதன் பின்னர் மணப்பாறை தொகுதி தி.மு.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: