உதயநிதியை ஏற்றுக்கொண்டோம், அவரது மகனையும் ஏற்றுக்கொள்ள சொன்னலும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர்.கே.என்.நேரு தெரிவித்துள்ள கருத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு புதிய நியாய விலைக்கடையை திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணா தொடங்கிய திமுகவினை கபளீகரம் செய்ததால் தான் எம்.ஜி.ஆருக்கு திமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பகட்சியாக திமுகவினை மாற்ற கருணாநிதி முயல்கிறார் என்று குற்றம்சாட்டி எம்.ஜி.ஆர் வெளியேறுவதற்கு அது தான் காரணம். எம்.ஜி.ஆருக்கு எதிராக கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவை வைத்து, ரசிகர் மன்றங்களை தொடங்கினார்.
இதையும் படிக்க : நான் கையில் கட்டி இருக்கும் வாட்ச் விலை ரூ.3.5 லட்சம்.. அண்ணாமலை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அதன் விளைவாக தான் புகைச்சல் ஏற்பட்டது. வாரிசு அரசியலை கண்டித்து தான் எம்.ஜி.ஆர் அதிமுகவினை தொடங்கினார். அதே போன்று இன்று திமுகவுடன் ஓட்டி உறவாடிக்கொண்டு இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், மு.க.ஸ்டாலின் முன்னிலைப்படுத்துவதை கண்டித்தும், வாரிசு அரிசியலை எதிர்த்து தான் மதிமுகவினை தொடங்கினார். உதயநிதிஸ்டாலினை முன்னிலைப்படுத்த தொடங்கியது முதலே, அவர் அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். வேறு வழியில்லமால் திமுக முன்னணி தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வார்த்தைகளுக்காக உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினாலும், அவர்கள் உள்ளுக்குள் இருக்கும் புழுக்கம் எல்லோருக்கும் தெரியும். அது நேரம் காலம் வரும் போது தெரியும். தற்பொழுது உதயநிதி ஸ்டாலினை திமுக முன்னணி தலைவர்கள் புகழ்ந்து பேசுவதை நகைச்சுவைக்காக கூட எடுத்துக்கொள்ளலாம். எங்களுக்கு வேறு வழியில்லை உதயநிதியை ஏற்றுக்கொண்டோம், அவரது மகனையும் ஏற்றுக்கொள்ள சொன்னலும் ஏற்றுக்கொள்வோம் என்று திமுக முன்னணி தலைவர்கள் கூறுவதை வார்த்தையாகவும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது வேறு வகையிலும் அதை எடுத்துக்கொள்ளலாம்.
திமுகவில் நிலை அப்படித்தான் உள்ளது எங்களுக்கு வேறுவழியில்லை, எங்கள் நிலை இப்படித்தான் என்று சொல்லமால் சொல்கிறார் கே.என்.நேரு. திமுக குடும்ப கட்சி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்ணா கூறியது போல திமுகவினருக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும், கூட்டணி அமைந்தாலும், கூட்டணி அமையாவிட்டாலும் திமுக ஆட்சி நீக்கப்படவேண்டும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். மாற்றம் என்று சொல்லிய திமுக இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் கொதித்து போய் உள்ளனர். திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயராக இல்லை, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் மகாத்தான வெற்றி பெறும். எல்லா கட்சிகளும் தனியாக போட்டியிட தயராக இருந்தால், அதிமுகவும் தனித்து நிற்க தயராக உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆவினில் பால், நொய், வெண்ணை உள்ளிட்ட விலைகளை உயர்த்தியுள்ளனர். விலையை குறைக்க வேண்டும், ஆனால் விலையை உயர்த்தியுள்ளனர். மக்கள் மீது திமுக அரசு தொடர்ந்து சுமையை தான் சுமத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, K.N.Nehru, Kadambur raju, Kovilpatti, Udhayanidhi Stalin