5 தொகுதிகளை கேட்கும் ஈஸ்வரன்: 2 இடங்களை ஒதுக்க திமுகவுக்கு விருப்பம் என தகவல்

5 தொகுதிகளை கேட்கும் ஈஸ்வரன்: 2 இடங்களை ஒதுக்க திமுகவுக்கு விருப்பம் என தகவல்

ஈஸ்வரன்

திமுக 175 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

 • Share this:
  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இன்று அண்ணா அறிவாலையத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், “திமுக எங்களின் நீண்டகால நண்பராக இருக்கின்றது. 4 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருக்கிறோம். அதிகப் படியான இடங்களை ஒதுக்கவேண்டும் என்ற எங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூறினார்.

  இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 5 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக 2 தொகுதிகளை ஒதுக்க முன்வந்திருப்பதாகவும், 3 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  திமுக 175 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, கூட்டணி கட்கிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  Must Read: சசிகலாவின் துரோகிகள் வெளியில் இல்லை.. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள் - திவாகரன்

   

  இன்று மாலை 5 மணி அளவில், மதிமுக மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
  Published by:Suresh V
  First published: