நவீன சிகிச்சைக்கு தயாராகிறது சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை

ESIC மருத்துவமனை

படுக்கைகள் அதிகரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும்.

  • Last Updated :
  • Share this:
சென்னை கேகே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை இன்னும் 2 ஆண்டுகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இஎஸ்ஐ மருத்துவமனைகள் நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர் ராஜு  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 1991-ம் ஆண்டு முதல் 400 படுக்கைகளுடன் கேகே நகர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆனால் சிக்கலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம் .

இதை தவிர்க்கும் பொருட்டு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைகள் செய்வதற்காக நவீன உபகரணங்கள் வாங்க இருப்பதாக தெரிவித்தார். கட்டிட விரிவாக்கம், மருத்துவர்கள், ஊழியர்கள் நியமனம், படுக்கைகள் அதிகரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

இதய நோய், நீரிழிவு, கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சை அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுவரையில் இரண்டாம் நிலை நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்தோம். இதனால் இங்கு வரும் நோயாளிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. அதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து விதமான சிகிச்சைகளும் கேகே நகர் மருத்துவ மனையில் கொண்டுவரப்படும். இதற்காக ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சௌமியா கண்காணிப்பாளர் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்
Published by:Vijay R
First published: